உணவுப் பொருட்களை நீண்ட நேரம் புதிதாகவும் சாப்பிடக்கூடிய நிலையிலும் வைத்திருப்பதற்கான குறிப்புகள்
-
குளிர்சாதனப்பெட்டி:
+5 டிகிரியில் வைக்கவும்
- மேல் அடுக்கு: பாலாடைக்கட்டி, எஞ்சிய உணவுகள், உப்பிலிட்ட வெள்ளரி, போன்றவை.
- நடு அடுக்கு: பால், தயிர், பாலேடு, தயிர் பாலாடைக்கட்டி
- கீழ் அடுக்கு: இறைச்சி, கொத்திறைச்சி, மீன்
- சாலட் இழுப்பறை: சாலட் மற்றும் குளிர்ச்சியால் பாதிப்படையாத காய்கறிகள் மற்றும் பழங்கள்
- கதவு: வெண்ணெய், முட்டைகள், சுவையூட்டிகள், மெயோனீஸ், கடுகு, ஜாம், குளிர்பானங்கள்
-
எஞ்சிய உணவுகள்
எஞ்சிய உணவுகள் மற்றும் பாதி பயன்படுத்தப்பட்ட பின் மீதமுள்ள டின்களில் உள்ள உணவுகளையும் காற்றுபுகாத பாத்திரங்களில்வைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.
Bundeszentrum für Ernährung © BLE
-
பொருள் சேமிப்பு அலமாரி – ஒளியற்றதாக, குளிர்ச்சியானதாக,உலர்வானதாக இருக்க வேண்டும்
- திறக்கப்பட்ட கொட்டை வகைகள், மாவு, ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ் போன்ற பைகளை நன்றாக மூடி வைக்கவும்; முடிந்தவரை காற்றுபுகா பாத்திரங்களில் வைப்பது நல்லது. இது பூச்சிகள் உள்ளே நுழைவதையும் பொருட்களை சேதப்படுத்துவதையும் தவிர்க்கும்.
- உருளைக்கிழங்குகள் (குளிர்சாதனப்பெட்டியில் சமைக்காதவற்றை வைக்கவே கூடாது)
- எண்ணெய், காடி, நறுமணப்பொருட்கள்
- பதப்படுத்தப்பட்ட உணவுகள் (பயன்படுத்தப்படாதவை)
- ரொட்டி (இது உலர்ந்து விடாமல் குளிர்சாதனப்பெட்டியில் நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும், இருப்பினும் விரைவில் கெட்டுவிடும்)
-
“இதற்குள் பயன்படுத்தவும்” – “தேதிக்கு முன்”
- “இதற்குள் பயன்படுத்தவும்”: இந்த தேதியை கடந்திருந்தால், அந்த உணவை சாப்பிடக் கூடாது. இது இறைச்சி, இறைச்சி உணவு வகைகள் மற்றும் மீன்களுக்கு பொருந்தும்.
- “தேதிக்கு முன்”: இந்த தேதிவரை தயாரிப்பாளர் உணவு பொருட்களின் தரத்தை உறுதி செய்கிறார். விதிப்படி, குறிப்பிட்ட தேதிக்கு பின்னும் நீண்ட சமயத்திற்கு அந்த உணவை உட்கொள்ளலாம். நீங்கள் பார்த்து முகர்ந்து உறுதிசெய்து கொள்வது நல்லது.
Weitere Informationen:
Zu Einkaufen und Essen unter
www.sge-ssn.ch
Zu Konsumentenfragen unter
www.konsumentenschutz.ch
Zu Fragen rund um die Gesundheitsförderung unter
www.gesundheitsfoerderung.ch
PDF
Dieses Merkblatt wurde mit fachlicher Mithilfe der Schweiz. Gesellschaft für Ernährung SGE und finanzieller Unterstützung von Gesundheitsförderung Schweiz und FemmesTische Schweiz erstellt.
Bern/Zürich 2019